Friday, October 29, 2021

மீன் பிடிக்க

 A 237 TM-


        இரட்டை மருத்துவம் ஒருவரது வாழ்நாள்  முழுக்க மீன் சாப்பிடுவதற்கு மீன்பிடிக்க கற்றுக் கொடுக்கிறது.   

இரட்டை மருத்துவம் (Twin Medicine )   தோன்றுவது காலத்தின் கட்டாயமா?

1.ஆம்!. காலத்தின் கட்டாயம்தான்!. இரட்டை மருத்துவத்தில் சிகிச்சை எடுக்கும்பொழுது, அனைத்து விதமான நோய்களைக் குணப்படுத்துவதோடு, வராமலும் தடுத்து விடலாம். ஆரம்ப நோய்க்குக் காரணமான நாள்பட்ட மலச்சிக்கல், வயிற்றோட்டம், மற்றும் உடல் பருமன் (Chronic constipation, a Chronic diarrhea and Obesity /overweight) ஆகிய நோய்களையும் குணப்படுத்தி மீண்டும் வராமல் தடுத்து விடலாம். வாழும் தாய் மருத்துவம் என்கின்ற முதல் மருத்துவம் 9 அரோமணி விதிகளைக் கொண்டது. இது உடலுக்கு சிகிச்சை அளிக்கிறது. இரண்டு பகுதிகளைக் கொண்ட, மருத்துவ மனப்பயிற்சி மருத்துவம் {Medicine of Medicinal Meditation (MMM)} என்றழைக்கப்படும் இரண்டாவது மருத்துவம் மனதிற்கு சிகிச்சை அளிக்கிறது. முதல் பகுதி அனைத்து நோய்களையும், அலோபதி, மூலிகை, ஆயுர்வேதம், சித்தா மற்றும் ஹோமியோபதி மருந்துகள் குணப்படுத்துவதைப் போல நேரிடையாக குணப்படுத்தக் கூடிய மருத்துவ மனப்பயிற்சிகளைக் கொண்டது {Medicinal Meditations (MM)}. பகுதி 2 உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்த்து உடலை வலிமையாக்கி, வாழ்க்கையை வளப்படுத்தி உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது. இயற்கையிலேயே உடலுக்கு நோய்களை குணப்படுத்தும் குணமுண்டு என்று விவேகானந்தர், ஓசோ போன்ற மகான்கள் கூறியிருக்கிறார்கள். அந்த குணத்தைத்தான் இறைவன் என்மூலம் இரட்டை மருத்துவமாக, வெளிப்படுத்தியிருக்கிறார்..

2. மருத்துவ மனப்பயிற்சி மருத்துவம் (Medicine of Medicinal Meditation) எந்த வலியையும் அதன் தீவிரத்தைப் பொறுத்து, 20 முதல் 90 நிமிடங்களுக்குள் குணப்படுத்தும்.                    

3. எந்தவிதமான மருந்தோ அல்லது மூலிகையோ எடுக்காமல் நோய்களை குணப்படுத்தும் புது மருத்துவம் தோன்றுவது காலத்தின் கட்டாயமாகும். ஏனென்றால், பல்வேறு சோதனைகள், மருந்துகள், ஊசி மருந்துகள், அறுவை சிகிச்சைகள், பக்கவிளைவுகள், கட்டுக்கடங்காத மருத்துவ செலவுகள், உணவளிக்கும் தொழில் பாதிப்பு, குடும்பமே சோகத்தில் மூழ்குதல் ஆகியவை மக்களை விரக்தி நிலைக்குக் கொண்டு சென்று விட்டது. உலகப் புகழ்பெற்ற பாப்பாடகரும், ஆடுபவருமான அமெரிக்காவின் மைக்கேல் சாக்சனுடைய பிரேத பரிசோதனை (Post mortem) அறிக்கையானது,  ‘அவர் உட்கொண்ட அதிகப்படியான மருந்து மாத்திரைகள்தான் அவரைக் கொன்றது’ என்று சொல்லுகிறது.

எல்லா ஊடகங்களின் (Media) நெஞ்சை நொருக்கும் செய்தி என்னவாக இருந்தது. பொய்யான தயாரிப்பு/காலாவதியான தேதி பொறிக்கப்பட்ட காலாவதியான மருந்துகளை இருப்பு கிடங்குகலிலிருந்தும், சில்லரை வர்த்தகக் கடைகளிலிருந்தும் கைப்பற்றிய செய்திதான்.

4. இருதய நிபுணரும் மற்றும் மணிப்பால் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தருமான (cardiologist, and former vice chancellor of Manipal University) மருத்துவர் பி.எம்.ஹெக்டே, “மருந்துகள் குணப்படுத்துவதைக் காட்டிலும் கெடுதல்கள்தான் அதிகம் செய்கின்றன,” என்கிறார்.   
 நன்றி-‘THE HINDU’ : தேதி: 18-08-2008.

5. “கொழுப்பைக் கரைக்கும் மருந்துகள் (Anti-cholesterol drugs) மனவழுத்தத்தைக் கொண்டு வருகிறது.” என்று உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையம் (CCMB), ஹைதெராபாத் {The Centre for Cellular and Molecular Biology(CCMB), Hyderabad} வெளிப்படுத்துகிறது   
நன்றி - ‘THE HINDU’, தேதி- 26-06-2010.

6. “வாழ்க்கையில் வாய்ப்புகள் -பயமுறுத்தும் பிரச்சைனைகள்- பிந்தைய ஊனம் உயர்- இது நீரிழிவு நோயாளிகளுக்கு மேலும்  நோய் ஆகும்”
Aநன்றி-:‘THE HINDU’ தேதி- 02-05-2010.
            
7. நோயாளிகளின் தலையில் மற்றொரு இடி விழுந்ததைப் போல ஒரு செய்தி இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
05-05-2010 தேதியிட்ட ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழ்  ‘மருத்துவ ஐசடோப்புகளின் (medical isotopes) தட்டுப்பாட்டினால் நோயாளிகள் பாதிப்பு’ என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது.  “உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள மருத்துவ ஐசோடோப்பின் தட்டுப்பாட்டினால், பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகள் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுப்பது மற்றும் அறுவை சிகிச்சைகள் (scans and surgeries) ஆகியவற்றை தள்ளி போடக்கூடிய கட்டாய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. எதிர்கால வரத்தும் (future supplies) நிச்சயமற்ற நிலை அதிக அளவு நிலவுகிறது. தட்டுபாடு, சிகிச்சை அளிப்பதில் தாமதத்தை ஏற்படுத்துவதோடு, ஐசோடோப்புகளின் விலை உயர்வால், நோயறியும் சோதனைகளும் (diagnostic costs) செலவும் அதிகமாக உயர்ந்துள்ளது. விலை உயர்வு சாதாரண மக்களை பாதித்திருக்கிறது.”  

8. “அமெரிக்காவில் மருந்து தொழிற்சாலைகளிலிருந்து புதிய மருந்துகள் வருவதில் வேகம் இல்லை. ஏனென்றால், அவர்களிடம் (மருந்து தயாரிப்பவர்களிடம்) விருப்பமோ (புதிய மருந்து கண்டுபிடித்து தயாரிப்பதில்), முயற்சியை மேற்கொள்வதற்கு வேண்டிய மூலதனமோ இல்லை. ஆகையால் (புதிய) மருந்துகளை உருவாக்கி உதவுவதற்கு, பில்லியன் டாலர் அரசு மருந்து வளர்ச்சி மையத்தை (billion-dollar government drug development centre) துவக்குவதற்கு ஒபாமா நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது” நன்றி-:‘THE HINDU’ தேதி- 24-01-2011 

9. “அனேக ஆண்டிபையாட்டிகளை (antibiotics) எதிர்க்கும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணுயிர் NDM-1 (microbe, NDM-1)மூலம் எழுந்துள்ள கடுமையான அச்சுறுத்தல், (அபாய) அலாரம் மற்றும் பீதியை கிளப்பிவிட்டிருக்கிறது”.
நன்றி-:‘THE HINDU’ தேதி- 09-03-2011

10.  “எதிர்ப்பு நுண்ணுயிர் கொடுக்கும் எதிர்ப்பு (Antimicrobial resistance) தொற்று நோய்களைக்  (infectious diseases)  கட்டுப்பாட்டுக்குள் கொணடுவர சவாலாக அமைந்துள்ளது. எதிர்ப்பு நுண்ணுயிர்களின் (Antimicrobial) காரணமாக உண்டான தொற்று நோய்கள் அடிக்கடி தரமான சிகிச்சையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதன் விளைவாக, நோய் நீடிக்கவும், மரண அபாயத்திற்கும் வழிவகுக்கிறது. இந்த விதமாக எதிர்ப்பு நுண்ணுயிர்கள் (resistant microorganism), மற்றவர்களுக்கும் அதி வேகமாக பரப்பப்படுகிறது. இது ஆண்டிபயாடிக் (கண்டுபிடித்த) காலத்திற்கு முன்பு இருந்த நிலைக்கு மீணடும் திரும்புகின்ற அச்சுறுத்தலை கொண்டுவந்து, நோயின் காலம் நீடிப்பு, மருத்துவமனைகளுக்கு அடிக்கடி சென்று சிகிச்சை எடுத்தல், இதனால்  ஏற்படும் கூடுதலான மருத்துவ செலவு, குடும்பங்களுக்கும், சமுதாயங்களுக்கும்  கூடுதலான நிதிச் சுமை ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது.” 
நன்றி-:‘THE HINDU’ தேதி- 10-04-2011

11. புது டில்லியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் {Indian Council of Medical Research (ICMR)} இந்திய நீரிழிவு நோய்களின் மையமும் {India Diabetes (INDIAB) } இணைந்து நடத்திய ஆராய்ச்சியில்,  “2011-ம் ஆண்டில், 62.4 மில்லியன் மக்கள் நீரிழிவு நோய்களைக் (diabetes) கொண்டு வாழுகிறார்கள் மற்றும் 77.2 மில்லியன் மக்கள் நீரிழிவு வாசலில் நுழைய தயாராயிருக்கிறார்கள்” என்று தெரிய வருவதாக செய்தி கூறுகிறது. 
நன்றி-:‘THE HINDU’ தேதி- 30-09-2011
           
12, மேலே கூறப்பட்ட சூழ்நிலையில், இரட்டை மருத்துவம் தோன்றுவது காலத்தின் கட்டாயமாகும். ஏனென்றால், அது பரிசோதனை, மருந்து, மூலிகை முதலியன எதுவும் வேண்டியதில்லை; மருத்துவ செலவும் இல்லை; சிகிச்சைக்கு காத்திருக்கும் நேரமும், சிகிச்சையை ஆரம்பிக்கும் நேரமும் இல்லை என்றே சொல்லலாம். மருத்துவமனையில் 2 மணி நேர சிகிச்சைக்குப் பிறகு, நோயாளி சுயமாக வீட்டிலேயே நோய்  முழுவதுமாக குணமாகும் வரை சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.  தினசரி உணவளிக்கும் தொழில் எதுவும் பாதிக்காது. நிரந்தரக் குணத்திற்கு உத்திரவாதம் உண்டு.

13. எனது 71 வது வயதில் எந்த மருந்தும் எடுக்காமல், விரும்பிய எந்த உணவையும் கழிவில்லாமல் சாப்பிடுகிறேன் என்றால் அதற்கு இரட்டை மருத்துவம்தான் காரணம். எனது வாழ்க்கை முடிவதற்குள், இந்த மருத்துவம் அரசையும், மக்களையும் சென்றடைய வேண்டுமென்று இறைவனை வேண்டுகிறேன்.  

14. இரட்டை மருத்துவம் எளிய தத்துவத்தை (simple theory) கொண்டிருப்பதால், கற்பதற்கு எளிது. உயர்ந்த படிப்பு (10 வது படிப்பு போதும்) தேவையில்லை. குறுகிய காலப் பயிற்சியுடன் கூடிய படிப்பு போதுமானதாகும். இது குணப்படுத்தக் கூடிய மருந்தாகவும், தடுக்கக்கூடிய மருந்தாகவும் (preventive medicine) பயன்படுகிறது. நடைமுறையில் உள்ள மருத்துவங்களான நவீன மருத்துவம், ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி முதலியன ஒரு மனிதனுக்கு ஒரு நாள் உணவாக மீன் கொடுக்கிறது., இரட்டை மருத்துவம் அந்த மனிதனுக்கு அவன் வாழ்நாள்  முழுக்க மீன் சாப்பிடுவதற்கு மீன்பிடிக்க கற்றுக் கொடுக்கிறது.Please visit websites: nomedicine-tamil.com; twinmedicine.com, Email:twinmedicine@gmail.com
R.A.Bharaman (Aromani), 9442035291.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: