Friday, October 29, 2021

குச்சனூர் கோவிலும் மது பாட்டிலும்

   மதுபான (liquor) பாட்டில்களை தெய்வத்திற்கு படையிலிடலாமா!

A 76-அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை. 
செல் எண்கள்:9442035291; 7092209028 

குச்சனூர் கோவிலிலும்  மதுபான பாட்டிலும்    13-8-2019 தேதி,“தினதந்தி’” நாளிதழில் “குச்சனூர் சனீஸ்வரன் பகவான் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி சோனைமுத்து கருப்பசாமிக்கு மதுபான பாட்டில்களை படையலிட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்” என்ற செய்தியை படித்து மனவேதனை அடைந்தேன்.

அனைத்து மத வழிபாடுகளும் மனதின் மூலம்தான் நடைபெறுகின்றன. ஆகவேதான் நமது முன்னோர்கள் “மனமே கோயில்” என்று சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அந்த மனதை பேதலிக்க வைக்கும், நிலைகுலையச் செய்யும் மதுவை தெய்வத்திற்கு படையிலிடுவது அந்த தெய்வத்தை நிந்திப்பதாகும்! ஆகவேதான் அனைத்து மதங்களும் மதுவை ஒதுக்கியே வைத்திருக்கிறது.

மனகோவிலில், மக்கள் வழிபடுவதற்குரிய தெய்வம் மனதில் கொலுவிருக்கிறான். மனம் மார்பில் இருக்கிறது. அந்த மார்பில்தான், “உண்மை கடவுள்” குடியிருக்கிறான். அவனை வழிபடும்போது பலன்களை வாரிவழங்க காத்திருக்கிறான்.


அவனை எப்படி வழிபடுவது? கண்களை மூடுங்கள். மார்பை 20 நிமிடங்கள் கவனியுங்கள். வேறு எண்ணங்கள் வந்தால், அவற்றை நிறுத்திவிட்டு, மீண்டும், மீண்டும் கவனித்துக்கொண்டிருங்கள். காலையும் மாலையும் இவ்வாறு வழிபாடு செய்யுங்கள். இறைபலன்கள் கொட்டும் அருவிபோல ஓடி வரும்.

                ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்களது கருத்துகளை பதிவு செய்யவும்.







முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: