Friday, October 29, 2021

 நலமுள்ள குழந்தைகளை பெற்றெடுக்க!

           
ARO MEDICINE-ENG      

A 234-AP10 -
காட்டில் வாழும் மிருகங்கள் பிரசவத்தில் நோயுள்ள குட்டிகளை ஈனுவதில்லை. ஆனால் மனித              இனத்தில்  பெண்கள் பிரசவத்தில் நோயுடன் கூடிய குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்களே ஏன்?
1.காரணம் கருவுற்ற பெண்கள் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுகிறார்கள் (Attachment); இயற்கை உணவை சமைத்த உணவாக மாற்றாமல் சாப்பிடுகிறார்கள்; சூடான குளிர்ச்சியான உணவுப் பண்டங்களை மாறி மாறி சாப்பிடுகிறார்கள்; தாகம் எடுக்காமல் தண்ணீர் குடிக்கிறார்கள்; ஒரு உணவுக்கும் மற்றொரு உணவுக்கும் 4 மணி நேரம் இடைவெளி விடுவதில்லை அல்லது பசி எடுத்தபிறகு சாப்பிடுவதில்லை. கழிவுப் பொருள் முற்றிலும் அகற்றப்பட்டு விட்டதா என்று கவனிப்பதில்லை. காற்றோட்டமுள்ள அறையில் தூங்குவதில்லை. கொசுவலை, கொசுவத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி, காற்றோட்டத்தைத் தடுக்கவும், நச்சுக் காற்றைச் சுவாசிக்கவும் செய்கிறார்கள். பகலில் தூங்குகிறார்கள்.  இந்த எட்டு விதிகளை கடைப்பிடிக்காததாலும், உடலிலுள்ள துவாரங்களும், காலியிடமும் அடைபடுவதாலும் ஏற்படும் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டு அதைத் தொடர்ந்து வரும் நோய்களினால் அவதிப்படுகிறார்கள். ஆக, மேற்கூறிய 9 விதிகளையும் கடைப்பிடிக்காமல் விடுவதால் கருவுற்ற பெண்கள் மஞ்சக்காமாலை (jaundice), அனிமியா, சர்க்கரைச் சத்து (diabet), இளைப்பு (wheezing), சளிப்பிடித்தல், இரத்த அழுத்தம் (blood pressure) முதலிய நோய்களுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் உண்ணும் உணவு குறைபாடுகள் உள்ளதால், ஆற்றலில் குறைபாடு ஏற்பாடுகிறது.  அந்தக் குறைபாடுகள் அதனால் ஏற்படும் ஆற்றல் குறைவு, கருவிலுள்ள குழ்ந்தைகளையும் நோய்களின் மூலம் தாக்குகின்றன.ஆகவே பிரசவத்தில் ஆரோக்கியமான குழந்தை களைப் பெற்றெடுக்க வேண்டுமென்றால் வாழும் தாய் மருத்துவ சிகிச்சையில் கூறப்படும் 9 விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.  

2. குழந்தை பிறந்த நாளிலிருந்து பால்குடி மறக்கும் வரை குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கின்றன.
காரணம் அளவுடன் தாய்ப்பாலைக் குடிக்கிறார்கள்; தாய்ப்பாலில் சூடோ, குளிர்ச்சியோ இல்லை. நமது உடலின் டெம்பரேச்சரான 37 டிகிரி செண்டிகிரேடில் தான் தாய்ப்பால் இருக்கிறது. ஆகவே குழந்தைகளின் வாய், தொண்டை, உணவுக்குழல், இரைப்பை ஆகிய உறுப்புக்களில் விரிவோ சுருக்கமோ ஏற்படுவதில்லை. பால் குடித்துக் கொண்டிருக்கும்போது இயற்கை உணவான பழம் கொடுப்பதில்லை; தாய்ப்பாலில் தண்ணீர் இருப்பதால், தனியாக குழந்தைகள் தண்ணீர் குடிப்பதில்லை. ஏற்கனவே குடித்த பால் செரிமானமாகி பசி எடுத்த பிறகுதான் குழந்தைகள் பால் குடிகின்றன. மலமும் முழுவதும் வெளியேறிவிடுகிறது. காற்றோட்ட மில்லாவிட்டால் குழந்தை அழ ஆரம்பித்துவிடும். ஆகவே குழந்தைகளை காற்றோட்டமுள்ள அறையில் படுக்க வைப்பார்கள். இவ்வாறு 7 விதிகளையும் குழ்ந்தைகள் இயற்கையாகவே கடைப்பிடிக்கின்றன. இதனால் எல்லாக் குழந்தைகளும் தாயிடம் பால் குடிக்கும் காலம் வரை ஆரோக்கியமாகவே இருக்கின்றன.

3. பால்குடியை நிறுத்திவிட்டு திட உணவுக்கு மாறும்போது தான் குழந்தைகள் சளி, காய்ச்ச்ல், மூச்சுத்திணறல், வயிற்றோட்டம் முதலிய நோய்களால் தாக்கப்படுகிறார்கள். இது ஏன்?
தாய்மார்கள் குழந்தைகளுக்கு உணவு ஊட்டிவிடுகிறார்கள் (அளவுக்கு அதிகமாகத்தான்). ஊட்டி முடித்தவுடன் கட்டாயமாக தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறார்கள் (தாகம் எடுக்காமலே தண்ணீர் கொடுக்கிறார்கள்). வேறு காரணத்திற்காக குழந்தை அழுதாலும் பசி எடுக்காமலே பிஸ்கட் முதலிய இடைத்தீனியை திணிக்கிறார்கள். பழங்களை சமைத்த உணவாக மாற்றாமல் அப்படியே ஊட்டுகிறார்கள். குழந்தைகளை கொசுவலைக்குள் தூங்க வைக்கிறார்கள். இவ்வாறு குழந்தைக்கு திட உணவு கொடுப்பதில் அரோமணியின் அனைத்து விதிகளும் மீறப்படுகின்றன. இதனால்தான் குழந்தைகள் கட்டாயமாக நோய்களின் கோரப்பிடியில் தள்ளப்படுகிறார்கள்.

4. குழந்தைக்கு உணவு ஊட்டக் கூடாது, ஏன்?
எந்த மிருகமும் தன் குட்டிகளுக்கு இரை ஊட்டுவதில்லை. குழந்தை தவழும் போதே கீழே கிடக்கும் பொருட்களை வாயில் எடுத்து வைக்க ஆரம்பிக்கும். குழந்தை தானே கையில் எடுத்துச் சாப்பிட வைப்பதற்குத்தான், இறைவன் குழந்தைக்கு இந்தப் பழக்கத்தைக் கொடுக்கிறான். ஒரு தட்டில் சோற்றுப்பறுக்கைகளை வைத்துவிட்டால், அதுவே ஒன்றொன்றாக எடுத்துச் சாப்பிட ஆரம்பிக்கும். வயிறு நிரம்பியவுடன் அது தானாகவே சாப்பிடுவதை நிறுத்திவிடும். இந்த முறையில் குழந்தையை சாப்பிடவிட்டால் குழந்தை, தான் உண்ணும் உணவின் அளவு தெரிந்து சாப்பிட்டு, நோய் நொடியில்லாமல் வளர்ந்து வரும்.

5. அப்படியில்லாமல் தாய்மார்கள் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதினால் அந்தக் குழந்தைகள் தனது வயிற்றின் அளவு தெரியாமலே சாப்பிட்டு வளர்கிறது. நாளடைவில் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடிய நிலைமை குழந்தைகளுக்கு வந்து விடுகிறது. இதனால் அடிக்கடி செரிதல் கோளாறு, மலச்சிக்கல், காய்ச்சல், தலைவலி ஆகிய நோய்களினால் தாக்கப்பட்டு பெற்றோர்களுக்கு கவலையை கொடுக்கிறது. இந்த நிலைக்குக் குழந்தைகள் காரணமில்லை. தாய்தான் காரணம். தாய்மார்கள் உணவை குழந்தைகளுக்கு ஊட்டி முடித்தவுடன் குடிக்கத் தண்ணீரை வலுக்கட்டாயமாகக் கொடுக்கிறார்கள். இதனால் தாகம் எடுக்காமலே தண்ணீர் குடிக்கக் கூடிய பழக்கத்திற்குக் குழந்தைகள் ஆளாகிறார்கள். இதன் மூலம் பிரைமரி காம்ப்ளக்ஸ் என்னும் இருமல் நோய்க்கும், நெஞ்சில் சளிக்கட்டுவது, அடிக்கடி சளிப்பிடித்தல், மூக்கடைப்பு, மூக்கிலிருந்து நீராக ஒழுகுதல், மூச்சுத்திணறல் ஆகிய நோய்கள் சுலபமாக் குழந்தைகளைத் தாக்குகின்றன.

6. இதற்கு மாறாக, குழந்தை தாகம் எடுத்தால், தண்ணீர் குடிக்கப் பழக்கப்படுத்த வேண்டும். காய்ச்சி ஆறிய தண்ணீரை ஒரு பாட்டிலில் அடைத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து விட வேண்டும். அதற்குத் தாகம் எடுக்கும் போது அந்தப் பாட்டிலைக் காட்டும். அப்பொழுது அந்த பாட்டிலிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்கக் கொடுக்க வேண்டும். மறுமுறை தாகம் எடுக்கும் போது தானாகவே அந்த பாட்டில் தண்ணீரை எடுத்துக் குடிக்க ஆரம்பிக்கும். இப்படி தாகம் எடுத்துக் குடிக்கப் பழகிவிட்டால் குழந்தையை நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

7. மற்ற விதிகளையும் முழந்தைகள் கடைப்பிடித்து வரும்படி பழகிவிட்டால், குழந்தைகள் ஆரோக்கியமாகவும் வலிமையுடையவர்களாகவும் சீரான மூளை வளர்ச்சியும் பெற்று வாழ்க்கையில் சாதனை படைக்கும் வல்லவர்களாகிவிடுவார்கள்.

Please visit websites: www.medicineliving.comwww.medicineliving.blogspot.com; Email:twinmedicine@gmail.com
R.A.Bharaman (Aromani), 9442035291. 
Attachmentமுந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: