Friday, October 29, 2021

அரசே ஊக்கபடுத்தலாமா

   அரசே அறியாமையை ஊக்கபடுத்தலாமா?-இம            

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை

செல் எண்கள்: 9442035291; 8754880126.

  
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகமே அறிவிப்பு செய்திருக்கிறது (5-2-2020 தேதி தினதந்தி). நல்ல நேரம் கெட்ட நேரம் என்பதே கிடையாது. இறைவன் கொடுத்த 24 மணி நேரமும் நல்ல நேரம்தான்.

நேரம் நமக்கு எப்படி கிடைக்கிறது? பூமியின் நிறை (Mass) 6 x 1024 kilograms (6,000,000,000,000,000,000,000,000 kilograms).இவ்வளவு நிறையைக் கொண்ட பூமி தன்னைத் தானே அண்ட வெளியில் சுற்றி 24 மணி நேரத்தைக் கொடுக்கிறது. ஒரு நொடியை இழந்துவிட்டால், அதை திரும்பப் பெற முடியாது. ஒரு மணி நேரத்தை இழந்து விட்டால், அந்த நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை இழக்கிறோம்; வருவாயை இழக்கிறோம்; வயது கூடிவிடுகிறது. ஒரு கோடி ரூபாயை இழந்துவிட்டால் திரும்ப பெற்றுவிடலாம். திரும்ப பெறகூடிய ஒன்றுக்காக, திரும்ப பெறமுடியாத நேரத்தை, நேரம் சரியில்லை என்று நேரத்தை இழப்பதைப் போன்ற அறியாமை வேறு எதுவும் இல்லை.

தீமையும் நன்மையும் பிறர்தருவதால் வருவதில்லை என்று தமிழ்புலவன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாலே சொல்லியிருக்கிறான். அதாவது, தீமையும் நன்மையும் கெட்ட நேரம், நல்ல நேரத்தால் வருவதில்லை. அவரவர் செய்த பாவ புண்ணியங்கள் விதியில் அடக்கமாகி, அதன்படிதான் நமக்கு இன்ப துன்பங்கள் ஏற்படுகின்றன. அரசுதான் இந்த பாடலை பாடமாக சேர்த்திருக்கிறது. அந்த அரசே அறியாமை கருத்துக்களை பரப்பலாமா!.

அறியாமை அகல ‘தலைக் கண” மருத்துவ மனபயிற்சியை தினசரி காலை ஒரு வேளை செய்தாலே போதும். அறியாமை அகன்று அறிவுடமை பெருகும். அறிவுடமை பெருகிவிட்டால், எல்லா நேரமும் உங்களுக்கு பயனுள்ள நேரமாக மாறிவிடும்.

அறியாமை அகன்றதால் இறைவன் எனக்களித்த பரிசுதான் அரோமணியின் 11 விதிகள்.
              ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: